ஆப்நகரம்

Darbar நாங்க யாரையும் சொல்லல, கைதி ஷாப்பிங் வசனத்தை நீக்கிடுறோம்: லைகா

தர்பார் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க முடிவு செய்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Jan 2020, 11:03 am
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் பணம் இருந்தால் சிறையில் இருக்கும் கைதி வெளியே ஷாப்பிங் கூட போகலாம் என்று ஒரு வசனம் உள்ளது. அந்த காட்சியை பார்த்தவர்கள் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை தான் கிண்டல் செய்துள்ளார்கள் என்றார்கள்.
Samayam Tamil darbar


இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். இதையடுத்து தர்பார் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் லைகா நிறுவனம் கூறியிருப்பதாவது,

எங்களின் தர்பார் திரைப்படத்தில், கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல.

Rajinikanth கோடி, கோடியாய் வசூலிக்கும் தர்பார்: எங்கெங்கு எத்தனை கோடி தெரியுமா?

இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதியை சட்டவிரோதமாக வெளியே அழைத்துச் செல்வது சவுத்தில் நடந்துள்ளது என்று போலீஸ்காரர் ஒருவர் ரஜினியிடம் கூறும் வசனமும் உள்ளது. சவுத்தில் எந்த கைதி சட்டவிரோதமாக வெளியே சென்றார் என்பது எங்களுக்கு தெரியுமே என்று தியேட்டரில் அமர்ந்திருந்தவர்கள் கூறினார்கள்.

தர்பார் எஃபெக்ட்: ஐயா, டேய் தமிழ் இயக்குனர்களா...ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் கோரிக்கை

இந்நிலையில் சிறைச்சாலை வசனத்தை நீக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்