ஆப்நகரம்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மிகப்பெரிய தொகை வழங்கியுள்ள லைகா நிறுவனம்!

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் சார்பில் ரூபாய் 2 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Jun 2021, 2:58 pm
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மெல்ல மெல்லமாக குறைய துவங்கியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.
Samayam Tamil LYCA Productions
LYCA Productions


அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, அதற்காக அனைவரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகப் பொதுவெளியில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்

இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொது மக்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி வந்தனர். இந்த நிலையில லைகா புரொடக்சன்ஸ் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2 கோடி காசோலையை வழங்கியுள்ளனர்.

குளியலறையில் ஒரு குளுகுளு போட்டோ ஷுட்: பிகில் பட நடிகையின் வைரல் புகைப்படம்!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள் திரு.GKM தமிழ்குமரன் மற்றும் திரு. நிருதன், திரு. கெளரவ் ஆகியோர் 2 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நடிகர்கள் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்