ஆப்நகரம்

AK 62 Update: 'ஏகே 62' அறிவிப்பு வெளியாக போவது எப்போ தெரியுமா.?: இவரே சொல்லிட்டாரா.!

'துணிவு' படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள 'ஏகே 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்க்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 27 Mar 2023, 8:05 pm
'ஏகே 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது தான் அஜித் ரசிகர்களின் மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது. இந்த வாரம் வெளியாகும் அடுத்த வார வெளியாகும் என எதிர்பாப்புடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் 'ஏகே 62' படத்தின் அப்டேட் குறித்து லைகாவின் தமிழ் குமரன் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil ஏகே 62
ஏகே 62


கடந்த பொங்கல் வெளியீடாக அஜித் நடிப்பில் 'துணிவு' படம் ரிலீஸ் ஆனது. எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்தப்படம் உருவானது. மூன்றாவது முறையாக இந்த கூட்டணி 'துணிவு' படத்தில் இணைந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்தப்படம் வெளியானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

'துணிவு' படத்திற்கு முன்பாக அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. குறிப்பாக அந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக 'துணிவு' படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல், காதில் கடுக்கன் என வேறலெவலில் லுக்கில் மாஸ் காட்டியிருந்தார் அஜித்.

இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 'துணிவு' படத்தினை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் 'துணிவு' பட ரிலீசுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் உருவாக்கிய கதை அஜித் தரப்புக்கு பிடிக்காததால் 'ஏகே 62' படத்திலிருந்து அவர் விலகியதாக தகவல்கள் வெளியானது.

'பொன்னியின் செல்வன் 2' படத்துக்காக களமிற்கும் ஆண்டவர்: நோ சொல்லிட்டாரா ரஜினி.?

இதனையடுத்து 'ஏகே 62' படத்தினை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனி கைப்பற்றினார். தடையற தாக்கா, தடம், மீகாமன், கலகத்தலைவன் உள்ளிட்ட ஆக்ஷன் ஜானர் படங்களை இயக்கிய மகிழுடன் அஜித் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ஆனால் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னமும் வெளியிடாமல் உள்ளனர்.

கடந்த சின தினங்களுக்கு முன்பாக அஜித்தின் தந்தை காலமானதால் 'ஏகே 62' அறிவிப்பு மேலும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லைகா தமிழ்க்குமரன் 'ஏகே 62' படத்தின் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leo:கெளதம் மேனன் சொல்றதை பார்த்தா.. 'லியோ' படம் குறித்து வெளியான மாஸ் தகவல்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்