ஆப்நகரம்

Pa Vijay : அஜித் - வித்யாபாலன் இடையே டூயட் பாடலை எழுதிய பா.விஜய்!

‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் அஜித், வித்யாபாலன் இடையே உருவாகும் காதலுக்காக ஒரு பாட்டை எழுதியுள்ளார் பா.விஜய்.

Samayam Tamil 15 Mar 2019, 3:59 pm
‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து, நடிகர் அஜித், தறபோது ‘தீரன்’ பட இயக்குனர் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
Samayam Tamil nerkonda-parvai


ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது. வழக்கறிஞராக அமிதான் பச்சன் நடித்த கேரக்டரில் அஜித் நடிக்கிறார். ஆனால் வினோத் ரசிகர்களுக்காக சில விசயங்களை சேர்த்துள்ளாராம். இப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் பாடல்கள் எழுதுவதாக தகவல் வெளியானது.

தற்போது புது ஸ்பெஷலாக அஜித், வித்யா பாலனுக்கும் இடையில் காதல் இருப்பது போல ஒரு பாடலை எழுதியுள்ளாராம். ஆகையால் இந்தப் படத்தில் அஜித்தும், வித்யா பாலனுக்கும் டூயட் பாடல் இருப்பது உறுதியாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்