ஆப்நகரம்

தற்கொலைக்கு காட்டும் தைரியத்தை, ஏன் வாழ்வதற்கு காட்டக்கூடாது? வைரமுத்து

மருத்துவக் கனவு பறிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் அனிதாவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

TNN 2 Sep 2017, 6:28 pm
மருத்துவக் கனவு பறிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் அனிதாவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil lyricist vairamuthu says about doctor anitha suicide
தற்கொலைக்கு காட்டும் தைரியத்தை, ஏன் வாழ்வதற்கு காட்டக்கூடாது? வைரமுத்து


நீட் தேர்வுக்கு எதிராக தனியாக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தற்கொலை குறித்து அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவி அனிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது.

அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன. ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மொத்தம் மரணம் மூன்று வகை.

இயல்பான மரணம் – அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு;

இன்னொன்று, கொலை – அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு;

மூன்றாவது தற்கொலை – அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

வாழ்ந்திருக்க வேண்டும் அனிதா...#neet #ripanitha Read: https://t.co/JjA5P8d7wv — வைரமுத்து (@vairamuthu) September 1, 2017 அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது? தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது? தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்