ஆப்நகரம்

சொன்னதைச் செய்யும் சினேகன்: தஞ்சை மக்கள் நூலகம்

பாடலாசிரியர் சினேகன் மக்கள் நூலகம் எனும் பெயரில் இலவச நூலகத்தைத் தொடங்குகிறார்.

TNN 24 Nov 2017, 5:09 pm
பாடலாசிரியர் சினேகன் மக்கள் நூலகம் எனும் பெயரில் இலவச நூலகத்தைத் தொடங்குகிறார்.
Samayam Tamil lyricsist snehan to start a free library
சொன்னதைச் செய்யும் சினேகன்: தஞ்சை மக்கள் நூலகம்


பாடலாசிரியர் சினேகன் ஏராளமான படங்களில் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். இருப்பினும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவர் பிரபலமானதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் வெற்றி பெற்றால் மக்களுக்காக நூலகம் தொடங்குவதாக அறிவித்தார்.

ஆனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை. ஆனால், தனது நூலகத் திட்டத்தை அவர் கைவிடவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் முதல் இந்த நூலகத்திற்கான பணிகள் தொடங்க உள்ளன.

அனைத்து வகையிலான புத்தகங்களுடனும் முற்றிலும் இலவசமான நூலகமாக இந்நூலகம் உருவாக உள்ளது. இதற்கு நடிகரும் நடனக் கலைஞருமான ராகவா லாரன்ஸ் முதலான பிரபலங்கள் உதவ முன்வந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்