ஆப்நகரம்

இதுவரை பார்க்காத ஒரு கெட்டப்: விஜய்காக சசிகுமார் தயாராக வைத்திருக்கும் ஸ்கிரிப்ட்

விஜய்-சசிகுமார் கூட்டணியில் ஒரு வரலாற்று படம் உருவாகும் என சில வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டது. அது துவங்காத நிலையில் வருங்காலத்தில் அது நிச்சயம் துவங்கும் என சசிகுமார் கூறியுள்ளார்.

Samayam Tamil 26 May 2020, 9:42 am
தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் பல வசூல் சாதனைகள் படைத்து வருகின்றன. தற்போது விஜய் நடித்து உள்ள மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
Samayam Tamil Sasikumar and Vijay


அடித்து விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்தது. இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

இதற்கு முன்பு பல இயக்குனர்கள் விஜய்யிடம் கதை கூறி இருக்கின்றனர். சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா, அருண்ராஜா காமராஜா, மோகன்ராஜா என பல இயக்குனர்கள் அவரிடம் கதை கூறியிருப்பதாக இதற்குமுன்பு செய்திகள் வந்தது. ஆனால் விஜய்யின் 65வது படத்தினை இயக்கும் வாய்ப்பு முருகதாஸுக்கு தான் கிடைத்துள்ளது.

சில வருடங்கள் முன்பு நடிகரும் இயக்குனருமான சசிகுமார் விஜய்யை வைத்து ஒரு வரலாற்று படம் இயக்கவுள்ளார் என்று செய்திகள் வந்தது. அந்த படத்தினை இயக்குவதற்காக சசிகுமார் ஒருமுறை பாகுபலி இயக்குனர் ராஜமௌலியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் புகைப்படங்களும் அப்போது வெளிவந்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த வரலாற்று படம் தற்போது வரை துவங்கப்படாமல் இருக்கிறது.

இந்த படத்திற்காக விஜய்காக இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு கெட்டப்பை தயார் செய்து வைத்திருக்கிறாராம். அதை ஆடை வடிவமைப்பாளர் என்.ஜெ. சத்யாவிடம் சசிக்குமார் ஒருமுறை காட்டினாராம். இதுபற்றி அவர் தற்போது ஒரு பேட்டியில் பேசி உள்ளார். சத்யா தெறி படத்தில் விஜய்க்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறி படத்தின் ஷூட்டிங்கிற்காக ஒருமுறை கோவா சென்றபோது சத்யா சசிகுமார் படம் பற்றி விஜய்யிடம் கேட்டாராம். அதற்கு பதில் அளித்த விஜய் "ஆமாம் நண்பா, பேசிட்டு இருக்கோம். பார்ப்போம்" என பதில் சொன்னாராம்.

சசிகுமார் வடிவமைத்துள்ள வித்தியாசமான கெட்டப்பில் விஜய்யை நாம் பார்ப்பது சாத்தியம் ஆகுமா என சசிகுமாரிடமே தற்போது ஒரு லைவ் பேட்டியில் கேட்டுள்ளார் அவர்.

அதற்கு பதில் கூறிய சசிகுமார் "ஆகலாம். விஜய்க்கு கதை சொன்னது உண்மை தான். கதை அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. படத்தை துவங்கலாம் என பிளான் செய்தோம். பட்ஜெட்டும் பெரிய அளவில் இருந்தது. ஆனால் வேறு சில காரணங்களால் அந்த படத்தை பண்ண முடியாமல் போனது. வருங்காலத்தில் நிச்சயம் பண்ணுவோம். காலம் அமைத்து வரும் போது நிச்சயம் பண்ணுவோம்" என தெரிவித்துள்ளார்.

சசிகுமார் தற்போது முந்தானை முடிச்சு படத்தினை ரிமேக் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 37 வருடங்களுக்கு முன்பு பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் அது. தற்போதைய இளைய சமுதாயத்தினர் அந்த படத்தினை பார்த்திருக்க வாய்ப்பு குறைவு என்பதால் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றார் போல ரீமேக் செய்ய உள்ளனர். ரீமேக் படத்திற்கும் ஸ்கிரிப்ட் பாக்யராஜ் தான் தயார் செய்கிறார்.

சசிகுமார் ஹீரோவாக ஆசிரியர் ரோலில் நடிக்கிறார். ஆனால் வேறு ஒருவர் இந்த படத்தினை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. முழுக்க முழுக்க கிராமத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்