ஆப்நகரம்

அடக் கடவுளே... இது என்ன மக்கள் செல்வனுக்கு வந்த சோதனை... ஷாக் கொடுத்த மாமனிதன் வசூல்!

மாமனிதன் வசூல் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 27 Jun 2022, 9:22 pm
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாமனிதன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil maamanithan box office collections shocks
அடக் கடவுளே... இது என்ன மக்கள் செல்வனுக்கு வந்த சோதனை... ஷாக் கொடுத்த மாமனிதன் வசூல்!



அப்ளாஸை அள்ளி

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரம் என பட்டையை கிளப்பி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் பாலிவுட் என கலக்கி வருகிறார் மனிதர். என்ன கதாப்பாத்திரம் கொடுத்தாலும் எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்து அப்ளாஸை அள்ளி வருகிறார்.

நடிகர் 'பூ' ராமு காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபலங்கள் பாராட்டு

சமீபத்தில் விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் வெளியான படம் மாமனிதன். சீனு ராமசாமி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரமாண்ட இயக்குநரான ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி தள்ளியிருந்தார்.

அம்மாவான ஆலியா பட்.. அசந்துபோன பாலிவுட்!

சுமாரான வசூல்

பிரபலங்கள் பலரும் பாராட்டியதால் படம் வசூலை குவிக்கும், மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை என கூறப்படுகிறது. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் மிக சுமாரான வசூலை மட்டுமே பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல பாடகி... வைரலாகும் வீடியோ!

3 நாட்கள் வசூல்

மாமனிதன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் வெறும் 4.5 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாமனிதன் படக்குழு செலவு செய்த பணத்தை எடுக்க முடியுமா என்ற வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு இதுவரை 3 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

படக்குழு அதிர்ச்சி

இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் மிகப்பெரும் வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து இம்மாதம் வெளியான விக்ரம் படமும் வசூல் வேட்டையாடியது. அந்த படங்களுடன் ஒப்பிடும் போது பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்ற மாமனிதன் திரைப்படம் வசூலில் சுணக்கத்தை சந்தித்திருப்பது படக்குழுவையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்