ஆப்நகரம்

மெழுகுச் சிலையாகப் போகும் பாகுபலி பிரபாஸ்..!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டூசாட் அருங்காட்சியகத்தில் நடிகர் பிரபாசின் மெழுகுச் சிலை இடம் பெற உள்ளது.

TNN 1 Oct 2016, 9:14 pm
லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டூசாட் அருங்காட்சியகத்தில் நடிகர் பிரபாசின் மெழுகுச் சிலை இடம் பெற உள்ளது.
Samayam Tamil madame tussauds is making a wax statue of our bahubali prabhas
மெழுகுச் சிலையாகப் போகும் பாகுபலி பிரபாஸ்..!


தெலுங்கில் பல மெஹா ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தாலும்,'பாகுபலி' திரைப்படம் நடிகர் பிரபாசை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது.பாகுபலி இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்,பாகுபலி படக்குழுவினருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டூசாட் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாசின் மெழுகுச்சிலை இடம்பெற உள்ளது.மக்களிடையே பிரபலமானவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு, தற்போது பிரபாசுக்கும் கிடைத்துள்ளது.தென்னிந்தியாவிலிருந்து இந்த பெருமையை அடைந்திருக்கும் முதல் நபர் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமெளலி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் மெழுகுச்சிலைக்கான அளவீடுகள் பிரபாசிடம் எடுக்கப்பட்டு விட்டதாகவும்,அடுத்த வருடம் மார்ச் மாதம் பாங்காக் நகரில் பிரபாசின் மெழுகுச்சிலை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ராஜமெளலி தெரிவித்துள்ளார். Very happy to announce that Madame Tussauds is making a wax statue of our PRABHAS.. First South Indian to be honoured thus. — rajamouli ss (@ssrajamouli) October 1, 2016 The statue will be unvieled at Bangkok in March 2017 and subsequently will be toured all over the world. — rajamouli ss (@ssrajamouli) October 1, 2016   Madame Tussauds is making a wax statue of our PRABHAS.First South Indian to be honoured thus.

அடுத்த செய்தி

டிரெண்டிங்