ஆப்நகரம்

Madhavan: விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் மாதவன்!

நடிகர் மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 13 Jul 2018, 4:58 pm
நடிகர் மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil madhavan


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர் திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த விஞ்ஞானிகளில் இவர் முக்கியமனவர். இவர் மீது பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் பற்றிய ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆகையால் இவர் 1994ல் கைது செய்யப்பட்டு சிபிஐ போலீசார் இவரை விசாரித்து வந்தனர்.

சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது தெரியவர, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருந்தாலும், தன்னை வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்திவரும் இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது.

நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடிக்கவுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை, ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்