ஆப்நகரம்

Rocketry: மாதவனின் 'ராக்கெட்ரி' படம் எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக கொண்டு மாதவன் இயக்கி, நடித்துள்ள 'ராக்கெட்ரி நம்பி விளைவு' (Rocketry: The Nambi Effect) படம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Jul 2022, 2:14 pm
இந்தியாவின் சொந்த ராக்கெட்டை விண்ணில் ஏவும் கனவை நெஞ்சில் சுமந்த ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையையும், அவர் சந்தித்த விளைவையும் உணர்வு பூர்வமான ஒரு படைப்பாக கொடுத்துள்ளதே 'ராக்கெட்ரி' படம்.
Samayam Tamil Rocketry
Rocketry


விக்ரம் சாராபாயின் சிஷ்யர்களாக நம்பி நாராயணன், அப்துல்கலாம் உள்ளனர். அதில் நம்பி, Liquid Fuel எஞ்சின் தயாரிப்பை முன்னெடுக்கிறார். மேலும் நாசா Fellowship வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் உலகின் தலை சிறந்த பேராசிரியர் Luigi Crocco-விடம் பயிற்சி பெறுகிறார். நாசாவில் பெரும் சம்பளத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தாய் நாட்டிற்காக இஸ்ரோவில் பணியாற்ற முடிவு செய்கிறார் நம்பி.

குறைந்த தொகையை கொண்டு எப்படியாவது ராக்கெட் எஞ்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இந்திய விஞ்ஞானிகளை அழைத்துக்கொண்டு பிரான்ஸ் செல்கிறார். அங்கு உருவாக்கப்படும் எஞ்சின் தொழில்நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் கற்றுக்கொண்டு இந்தியா திரும்புகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனை தொடர்ந்து பல ஆண்டு போராட்டத்திற்கு பின்பு 60 லட்சம் மட்டும் செலவழித்து Liquid Fuel எஞ்சினை கண்டுபிடிக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் பல நூறு கோடிகளை செலவழித்து கண்டுபிடித்ததை மிக மிக குறைந்த செலவில் சாத்தியமாக்கி சாதனை படைக்கிறார் நம்பி நாராயணன். இஸ்ரோ அமைப்பின் இயக்குனராக வேண்டிய நம்பி திடீரென காவல் துறையால் கைது செய்யப்படுகிறார். அதன்பின்னர் என்ன நடந்தது என்பதே 'ராக்கெட்ரி' படத்தின் மீதி கதை.

ஒரு தவறான குற்றச்சாட்டால் ஒரு குடும்பம் இந்த சமூகத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர் கொள்கிறது. தனி மனிதனின் வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை அரசியலோடு, எமோஷனலாக படமாக்கியுள்ளார் இயக்குனர் மாதவன். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் படத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார்.

Simbu: இது என்னோட டைம்.. மரண மாஸ் காட்டும் சிம்பு..!

அதே போன்று சிறப்பு தோற்றத்தில் வரும் சூர்யவும், நம்பி மனைவியாக வரும் சிம்ரனும் நேர்த்தியான நடிப்பை தந்துள்ளனர். மொத்தத்தில் தேசத்தின் மீது பற்று கொண்ட ஒருவனின் வாழ்க்கை வரலாற்றை எந்தவித கமர்ஷியல் சாயமுமின்றி திரையில் காட்ட [பிரதிபலிக்க] முயற்சித்துள்ளார் மாதவன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்