ஆப்நகரம்

நடிகர் சங்கம் கட்டடம் கட்ட தடை நீட்டிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 27 Jun 2017, 4:21 pm
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madras hc extends enterim stay on nadigar sangam for encroaching public road
நடிகர் சங்கம் கட்டடம் கட்ட தடை நீட்டிப்பு


தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் பொது நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக சென்னை ஹபிபுல்லா சாலையில் வசித்து வரும் ஸ்ரீமன், அண்ணாமலை என்பவர்கள் வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்கக் கட்டிடம் 33 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நடிகர் சங்க கட்டிடம் அமையவிருக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. மேலும் ஆய்வறிக்கையை சமர்பிக்கும் வரை கட்டுமானப் பணி மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதையடுத்து, கட்டுமான பணிக்கான தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Madras High Court extended the ban on Nadigar Sangam over the construction of its building in Chennai.

அடுத்த செய்தி

டிரெண்டிங்