ஆப்நகரம்

‘காளி’ படத்தின் தடையை நீக்கிய சென்னை உயர்நீதி மன்றம்!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்துக்கு இருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 12 Apr 2018, 2:55 pm
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்துக்கு இருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil kaali


கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘காளி’. இந்தப் படத்துக்கு ‘பிக்சர் பாக்ஸ்’ நிறுவனம் சார்பில் வில்லியம் அலெக்ஸாண்டர் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், ‘‘விஜய் ஆண்டனி நடித்த ‘அண்ணாதுரை’ படத்தை வெளியிட்டதன் மூலம் எனக்கு ரூ.4.73 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை எனக்கு சரி செய்யாமல் அவர் நடித்துள்ள ‘காளி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, ‘காளி’ படத்தை வெளியிட தடை விதித்தும், ஏப்ரல் 11-ம் தேதிக்குள் ரூ.4.73 கோடியை நீதிமன்றத்தில் விஜய் ஆண்டனி செலுத்தினால் தடை நீங்கும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2 கோடியை விஜய் ஆண்டனி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் டிபாசிட் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யலாம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்