ஆப்நகரம்

இது நம்ம ஆளு படத்திற்கு தடை

சிலம்பரசன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

TNN 26 May 2016, 9:25 pm
சிலம்பரசன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Samayam Tamil madras high court stayed the release of simbu starrer idhu namma aalu film
இது நம்ம ஆளு படத்திற்கு தடை


கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக, படப்பிடிப்பில் இருந்துவந்த இது நம்ம ஆளு திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில், சிலம்பரசன், நயன்தாரா, சந்தானம், சூரி போன்றவர்களின் நடிப்பில் டி.ராஜேந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மூலமாக, குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், வெள்ளிக்கிழமையன்று இப்படம் ரிலீசாக தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே, படத்திற்கு ஃபைனான்ஸ் செய்திருந்த சஞ்சய்குமார் லால்கானி என்பவர் தனக்கான கடனை திரும்பக் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இது நம்ம ஆளு படத்திற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், எஞ்சிய மாவட்டங்களில் திட்டமிட்டபடி படம் ரிலீசாகும் என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்