ஆப்நகரம்

இயக்குனர் பா ரஞ்சித்தை கைது செய்ய கூடாது: உயர்நீதிமன்ற கிளை!

ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இயக்குனர் பா ரஞ்சித் பேசியதாக தொடப்பட்ட வழக்கில் வரும் 21ம் தேதி வரை அவரை கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 19 Jun 2019, 3:32 pm
இயக்குநர் பா. ரஞ்சித் தலித்திய சினிமாக்களை எடுத்து புகழ் பெற்றவர். தலித் மக்களுக்கு குரல் கொடுப்பதில் எப்போதும் முன்னனியில் இருப்பவர். அம்மக்களிடையே ஓர் அடையாளமாக பார்க்கபடுவபவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தஞ்சையில் நடந்த கூட்டம் ஒன்றில் ராஜ ராஜ சோழன் பற்றி இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. தலித்துகளின் நிலம் பறிக்கப்பட்டது ராஜராஜனின் காலத்தில் தான் என்றும், ராஜ ரஜனின் காலம் மக்களின் சுதந்திரத்திற்கு இருண்ட காலம் என்றும் அவர் பேசினார்.
Samayam Tamil ranji


இந்த விவகாரத்தில் ராஜராஜனை முன்வைத்து பல விவாதங்கள் நடக்க ஆரம்பித்தன. ராஜராஜனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடு முழுவதும் விவாதச்சணடைகள் கிளம்பின. இந்த விகவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, திருப்பனந்தாள் காவல்துறை ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் ரஞ்சித்தை கைது செய்ய மதுரை ஹைகொர்ட் தடை விதித்தது.

தமிழக அரசு ரஞ்சித்தை கைது செய்வதில் மும்முரம் காட்டியது ரஞ்சித்திற்கு பல இந்து அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்தன. இந்த நிலையில், ரஞ்சித் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் 19ம் தேதி அவரை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று வரை திருப்பனந்தாள் போலீசார் ரஞ்சித்தை கைது செய்யவில்லை.

இதையடுத்து, வரும் 21ம் தேதி ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்ததோடு, முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை வரும் வெள்ளிக்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்