ஆப்நகரம்

நடிகர் தனுஷ் போலி சான்றுகளை தாக்கல் செய்த வழக்கு ஆகஸ்ட் 30க்கு ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷ் தனது மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் போலியான பிறப்பு, கல்வி சான்றுகளை தாக்கல் செய்துள்ளார்.

Samayam Tamil 15 Jul 2019, 9:20 pm
நடிகர் தனுஷ் போலியான பிறப்பு, கல்வி சான்றுகளை தாக்கல் செய்ததால், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Samayam Tamil நடிகர் தனுஷ் போலி சான்றுகளை தாக்கல் செய்த வழக்கு ஆகஸ்ட் 30க்கு ஒத்திவைப்பு!
நடிகர் தனுஷ் போலி சான்றுகளை தாக்கல் செய்த வழக்கு ஆகஸ்ட் 30க்கு ஒத்திவைப்பு!


நடிகர் தனுஷ் தனது மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் போலியான பிறப்பு, கல்வி சான்றுகளை தாக்கல் செய்துள்ளார். ஆகவே, அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர் நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி வருகிறார். தனுஷிடம் பராமரிப்பு பணம் கேட்டு கதிரேசன், தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும், இதனால் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி கதிரேசன் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தனுஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தனுஷூக்கு எதிரான வழக்கு இன்று (திங்கள் கிழமை) விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு நீதித்துறை நடுவர் ஒத்திவைத்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்