ஆப்நகரம்

மதுரை முத்து திடீரென இரண்டாம் திருமணம்?

பிரபலமான நகைச்சுவை பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடிகர் மதுரை முத்து. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 4ம் தேதி இவரது மனைவி ஒரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

TNN 18 Aug 2016, 6:33 pm
மதுரை : பிரபலமான நகைச்சுவை பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடிகர் மதுரை முத்து. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 4ம் தேதி இவரது மனைவி ஒரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil madurai muthu marries again
மதுரை முத்து திடீரென இரண்டாம் திருமணம்?


மதுரை முத்துவின்(32), மனைவி சிவகங்கையை சேர்ந்த வையம்மாள், சிவகங்கையில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்லும் போது, திருப்பத்தூர் அருகே, தான் சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் வையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார்.

மனைவியை பிரிந்து தவித்த மதுரை முத்து, தனது முகநூல் பக்கத்தில் தனது மனைவி பற்றிய எண்ணங்களை உருக்கமாக பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்தது கொண்டதாக தகவலும், ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் தீயாக பரவி வருகிறது. ஆனால், இந்த திருமண காட்சி உண்மையானது இல்லை, இது ஒரு குறும்படத்திற்காக எடுக்கப்பட்டது என மதுரை முத்து விளக்கமளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்