ஆப்நகரம்

மகேஷ்பாபு நடிக்கும் நேரடி தமிழ் படம்!

மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் ‘வாஸ்கோடகாமா’ படம் நேரடி தமிழ் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

TOI Contributor 3 Aug 2016, 1:31 pm
மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் ‘வாஸ்கோடகாமா’ படம் நேரடி தமிழ் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil magesg babu will be acting in tamil film
மகேஷ்பாபு நடிக்கும் நேரடி தமிழ் படம்!


தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆவல் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மகேஷ் பாபு நடித்த ‘ஸ்ரீமந்துடு’ திரைப்படம் தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அப்படத்திற்கு பின்னர் தான் நடிக்கவிருக்கும் ‘பிரம்மோற்சவம்’ நேரடி தமிழ் படமாக இருக்கும் என மகேஷ் பாபு கூறினார். ஆனால் தமிழில் மொழிமாற்றம் மட்டுமே செய்யப்பட்ட ‘பிரம்மோற்சவம்’ திரைப்படம் தமிழகத்தில் பெரியதாக எடுபடவில்லை.

தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் வாஸ்கோடகாமா படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். மொழி மாற்றப்படம் போல் இல்லாமல் தமிழ் பதிப்பிற்கென தனி காட்சி அமைப்புகளை உருவாக்கும் முருகதாஸ் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளுக்கும் தனி தனி வசனகர்தாக்களை நியமித்துள்ளாராம். நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்