ஆப்நகரம்

விரைவில் 2.0 டீசர் வெளியாகும்: இயக்குநர் ஷங்கர்

ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் வரும் விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Jan 2018, 4:52 pm
ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் வரும் விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil making of 2 point 0 teaser goes on in full swing says director shankar
விரைவில் 2.0 டீசர் வெளியாகும்: இயக்குநர் ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் வைத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '2.0'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி துபாயில் நடைபெற்றது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. ஹாலிவுட் தரத்தில் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான இந்தப் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர் டீசர் சஸ்பென்சை கலைத்துள்ளார். "அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள மாப்சீனில் வைத்து 2.0 படத்தின் டீசர் பணிகள் மும்மரமாக நடக்கிறது. நிறைய கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட டீசர் தயாரானதும் விரைவிலேயே வெளியாகும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hi Everyone,
Happy Republic Day.

The teaser work of 2.0 is going in full swing at Mobscene, LA. It involves lot of CG, so once it is done the teaser will be released. #2Point0 #teaser
— Shankar Shanmugham (@shankarshanmugh) January 26, 2018

அடுத்த செய்தி

டிரெண்டிங்