ஆப்நகரம்

மலைக்கா அரோரா – அர்பாஸ் கானுக்கு விவாகரத்து: மும்பை கோர்ட் உத்தரவு

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு அர்பாஸ் கானும், நடிகை மலைக்கா அரோராவும் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

TNN 12 May 2017, 6:03 pm
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு அர்பாஸ் கானும், நடிகை மலைக்கா அரோராவும் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
Samayam Tamil malaika arora arbaaz khan divorced son arhaans custody granted to the mother
மலைக்கா அரோரா – அர்பாஸ் கானுக்கு விவாகரத்து: மும்பை கோர்ட் உத்தரவு


பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான். இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான இவர், நடிகை மலைக்கா அரோராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்கான் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதன் பிறகு தற்போது வரை இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மலைக்கா அவருடைய மகன் அர்கானுடன் மும்பையின் ஹார் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மும்பை குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதில், மகனை மலைக்கா அரோரா வளர்த்துக்கொள்ளலாம் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அர்பாஸ் கான் ஒப்புதலும் அளித்துள்ளார்.

இந்த பிரிவுக்கு நடிகர் அர்ஜூன் கபூர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மலைக்கா அரோராவும், அர்ஜூன் கபூரு நெருக்கமாக இருப்பதால் தான் இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. மேலும், மகன் அர்கான் உடன் இருவரும் ஒன்றாக இணைந்து கடந்த 10ம் தேதி நடந்த ஜஸ்டின் பைபரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்