ஆப்நகரம்

ரஜினிக்கு வில்லியான மலையாள பட நடிகை!

‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக மலையாள பட நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

Samayam Tamil 25 Oct 2018, 5:04 pm
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் மலையாள பட நடிகை மாளவிகா மோகனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Samayam Tamil malavika-mohanan


இதுகுறித்து மாளவிகா மோகனன் கூறுகையில், “ரஜினியுடன் நடிக்க இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்பு தந்த கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவருடன் நடித்தது எனக்கு ஆச்சரியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் பார்த்ததிலேயே அவர் தான் மிக எளிமையானவர்’ எனக் கூறியுள்ளார்.

நடிகை மாளவிகா இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு வில்லி என்பதால் வில்லனாக வரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிறார்கள். பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்