ஆப்நகரம்

விருது விழாவுக்கு படு கவர்ச்சி உடையணிந்து சென்ற பேட்ட நடிகை! வசைபாடும் நெட்டிசன்கள்

மாளவிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 21 Sep 2019, 10:57 am
மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான பட்டம் போலே படம் மூலம் நடிகை அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதைத்தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியானட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் பிரபலமானார்.
Samayam Tamil malavika


கன்னடம், மலையாளம், இந்தியைத் தொடர்ந்து தமிழில் அறிமுகமாகிய மாளவிகா, முதல் படத்திலேயே ரஜினியுடன் சேர்ந்து நடித்தார். அதில் குடும்ப குத்துவிளக்காக சசிகுமாரின் மனைவியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
View this post on Instagram 🥂 . . Photography•• @areesz Stylist•• @triparnam Outfit•• @gavinmiguelofficial PR•• @theitembomb Makeup•• @makeupartistkarishmabajaj Hair•• @mayurinalli_h_mua Earrings•• @flowerchildbyshaheenabbas A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on Sep 19, 2019 at 3:28am PDT

இந்த நிலையில் சமூகவலை தளத்தில் எப்போதும் படு ஆக்டீவாக இருக்கும் மாளவிகா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட அவர், படு கவர்ச்சியாக உடை அணிந்து சென்றுள்ளார்.

kaappaan சூர்யா உழைப்புக்கு ஆப்பு வைத்த தமிழ் ராக்கர்ஸ்

மாளவிகாவை கண்ட போட்டோ கிராபர்கள் வளைத்து வளைத்துப் போட்டோ எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் மற்றும் விடியோவை மாளவிகா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், 'பொது விழாவுக்கு இப்படியா உடை அணிவது?' என்று வசைபாடி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் தீயாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்