ஆப்நகரம்

பிகினி உடையில் மாளவிகா மோகனன்! லட்சக் கணக்கில் லைக்ஸ் அள்ளிய போட்டோ

நடிகை மாளவிகா மோகனன் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Samayam Tamil 14 Aug 2020, 10:57 am
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து இருப்பவர் மாளவிகா மோகனன். இது அவரது இரண்டாவது தமிழ் படம். அவர் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து தான் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
Samayam Tamil Malavika Mohanan


மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்கள் எப்போதும் மிக ஆக்டிவாக இருக்கிறார் என்பதால் அவரை அதிகம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். மேலும் மாளவிகா வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. குறிப்பாக கொரோனா லாக் டவுன் நேரத்தில் மாளவிகா மோகனன் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது எடுக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அவற்றுக்கு ரசிகர்ளிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. குறிப்பாக மாளவிகா மோகனன் பச்சை நிற வேட்டியில் வெளியிட்டு இருந்த சில புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இப்படி தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு அவர் சமீப காலத்தில் இணையத்தில் அதிகம் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் நீச்சல் உடையில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் மிக அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

View this post on Instagram 🌊 📸 @amrithakarnakardesign A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on Aug 13, 2020 at 7:52am PDT

மேலும் அந்த புகைப்படத்திற்கு அதிக அளவில் லைக்குகளும் குவிந்து வருகிறது. வெறும் 12 மணி நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்து 24 ஆயிரம் லைக்குகள் குவிந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படம் அவர் மும்பைக்கு அருகில் உள்ள இடத்திற்கு சுற்றுலா சென்று இருந்தபோது எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது. அது எங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது பற்றி மாளவிகா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். விஜய் கல்லூரி பேராசிரியர் ரோலில் நடித்து இருப்பது போல மாளவிகா மோகனனும் அதே ரோலில் தான் நடித்திருக்கிறார். மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாளவிகா மோகணன் பிறந்தநாள் அன்று அவருக்கு பிறந்தநாள் கிப்ட் ஆக மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் மத்தியில் அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தல அஜித் சர்ப்ரைஸ் போன் கால்? என்ன பேசினார் தெரியுமா

மேலும் தனது பிறந்தநாள் அன்று மாளவிகா ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அப்போது தமிழ் சினிமாவில் தான் இணைந்து பணியாற்ற விரும்பும் இயக்குனர் யார் என்பது பற்றியும் பேசியிருக்கிறார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் உடன் தான் பணியாற்ற ஆசை என அவர் தெரிவித்து இருந்தார். அது மட்டுமின்றி நடிகர் தனுஷ் உடன் இணைந்து பணியாற்ற ஆசை என நேரடியாகவே அவரிடம் ட்விட்டரில் மாளவிகா ஒரு முறை கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அப்படி பதிவிட்ட பிறகு தனுஷின் அடுத்த படம் ஒன்றில் மாளவிகா ஹீரோயினாக நடிக்கிறார் என தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்