ஆப்நகரம்

பிகினி போட்டோ கேட்ட நெட்டிசன்: இந்தா வச்சுக்கோன்னு கொடுத்த மாளவிகா மோகனன்.!

நடிகை மாளவிகா மோகனன் நெட்டிசனின் ஏடாகூடமான கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 27 Jun 2022, 7:37 am
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், தன்னை பற்றி வரும் நக்கல் மீம்களுக்கும் விளையாட்டாக எடுத்து கொண்டு பதிலளிப்பார். இந்நிலையில் ரசிகரின் விவகாரமான கேள்வி ஒன்றுக்கு மாளவிகா அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Malavika Mohanan
Malavika Mohanan


பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் பிரபலமானார். தனுஷ் ஜோடியாக இவர் நடித்த மாறன் படம் அண்மையில் வெளியானது. இவர் சினிமாவை காட்டிலும் கவர்ச்சி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் மாலத்தீவு சென்ற மாளவிகா மோகனன், அங்கு எடுத்த தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன், அங்கு படங்கள், வெப் தொடர் என படு பிசியாக இயங்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார் மாளவிகா மோகனன். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்தார்.

பஜான் லால் சேட்டு.. அஜித்தை சீண்டும் ப்ளூ சட்டை: கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

அதில் ஏடாகூடமான கேள்வி கேட்டவருக்கும் தக்க பதிலடியும் கொடுத்தார் மாளவிகா. அதாவது ரசிகர் ஒருவர், ‘ப்ளீஸ் நீங்கள் கடைசியாக எடுத்த பிகினி போட்டோவை அனுப்புங்க’ என கேட்டார். இதற்கு பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன், உடனடியாக பிகினி உடையை மட்டும் தனியாக வைத்து போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்