ஆப்நகரம்

அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் : கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு!?

மலையாள நடிகை கடத்தலை தொடர்ந்து மலையாள நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு இருக்கிறது என்று இயக்குநர் பைஜூ பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

TOI Contributor 14 Jul 2017, 4:35 am
மலையாள நடிகை கடத்தலை தொடர்ந்து மலையாள நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு இருக்கிறது என்று இயக்குநர் பைஜூ பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil malayalam actor dileep link with kalabhavan mani death says bhaiju
அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் : கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு!?


மலையாள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்பை காவல்துறையினர் விசாரணை காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில் திலீப் மீது வேறொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கும், திலீப்பிற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

நடிகர் திலீப் கலாபவன் மணி மரணத்துடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்றும் மலையாள பட இயக்குநர் பைஜூ குற்றம்சாட்டியுள்ளார். தன்னிடம் உரிய ஆவணங்கள் இருக்கிறது என்றும், இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் புகார் தெரிவிக்க போவதாக கூறியுள்ளார். கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் உள்ள என்று அவரது குடும்பத்தினர் சொல்லி வந்த நிலையில் பைஜூவின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்