ஆப்நகரம்

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பிரபல மலையாள நடிகர்!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 31 Jan 2019, 2:22 pm
ஸ்ரீனிவாசன், மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும், கதாசிரியருமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவால் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் ‘பிரண்ட்ஸ்’, ‘புள்ளக்குட்டிக்காரன்’, ‘லேசா லேசா’ உட்பட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் சினிமாவில் மிகச் சிறந்த எழுத்தாளராகவும், பல்வேறு திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
Samayam Tamil sreenivasan


இவரது மகன்கள் வினித் ஸ்ரீனிவாசனும், தியான் ஸ்ரீனிவாசனும் மலையாள சினிமாவில் நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ஸ்ரீனிவாசன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமாகிவிடுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிப்பதாகவும் கூறினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்