ஆப்நகரம்

உதயநிதியுடன் இணைந்த மலையாள நடிகர்!

உதயநிதி நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ஜெயராமும் இணைந்து நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 11 Apr 2018, 6:03 pm
உதயநிதி நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ஜெயராமும் இணைந்து நடிக்கவுள்ளார்.
Samayam Tamil udhyanidhi-jayaram


நடிகர் உதயநிதி ஸ்டாலின், சீனுராமசாமி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே’. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் ஈனாக் என்பவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனருக்கு இதுதான் முதல்படம். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர், இந்துஜா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஸ்டிரைக் முடிந்ததும் தொடங்கவுள்ளது. இந்தப்படத்தில் உதயநிதியின் அப்பாவாக கார்த்திக் நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் தற்போது இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்