ஆப்நகரம்

4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் ‘ஒடியன்’!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒடியன்’ படம் உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 13 Nov 2018, 5:59 pm
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒடியன்’ படம் உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
Samayam Tamil odiyan


இன்னும் மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘புலி முருகன்’. தற்போது மோகன்லால் நடித்துள்ள படம் ‘ஓடியன்’. இந்தப் படமும் ‘புலி முருகன்’ பட லெவலுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தைஅறிமுக இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் என்பவர் தான் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் டிசம்பர் -14ல் வெளியாகிறது. தற்போது அதற்கான புரமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்தப்படத்தின் ரிலீசில் பிரமாண்டம் காட்டும் விதமாக உலகெங்கிலும் 4000 தியேட்டர்களில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதுவரை 3000க்கும் அதிகமான தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துவிட்டதாக தகவல். அந்தவிதமாக வழக்கமாக ரிலீஸாகும் நாடுகள் மட்டுமல்லாமல் ஜப்பான், போலந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்தப்படம் வெளியாக இருக்கிறதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்