ஆப்நகரம்

11 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பாவுடன் இணையும் பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜ் 11 ஆண்டுகளுக்குப் பின் ‘கட்டப்பா’ சத்யராஜுடன் இணைந்து ஒரு சரித்திரப் படத்தில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 1 Mar 2018, 1:56 pm
நடிகர் பிருத்விராஜ் 11 ஆண்டுகளுக்குப் பின் ‘கட்டப்பா’ சத்யராஜுடன் இணைந்து ஒரு சரித்திரப் படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil malayalam actor prithviraj will join with sathyaraj in period movie
11 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பாவுடன் இணையும் பிருத்விராஜ்!


நடிகர் சத்யராஜ், பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் கட்டப்பா என்ற கேரக்டரில் நடித்தார். இந்தப் படம் சத்யராஜூக்கு மிகப்பெரிய புகழை தேடித் தந்தது. இந்த கேரக்டருக்கு உலக அளவில் பாராட்டுக்கள் கிடைத்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு சரித்திர கேரக்டரில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கும் படம் ‘காளியான்’. சுதந்திரத்திற்கு முன்னர் மலபார் பகுதியில் வாழ்ந்த ஒரு அரசரின் உண்மைக்கதை தான் இந்த படம். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார். பாகுபலிக்கு இணையாக சத்யராஜின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை எஸ்.மகேஷ் இயக்குகிறார். சங்கர் ஈஷான் லாய் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே சத்யராஜ், பிரித்விராஜுடன், ‘கண்ணாம்பூச்சி ஏனடா’ என்ற படத்தில் நடித்துள்ளார் .தற்போது 11 வருடங்களுக்கு பின் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்