ஆப்நகரம்

சம்பளத்தில் மலையாள ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா - நடிகர் சீனிவாசன்!

மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் நடிகர்களை விட, நயன்தாரா அதிக சம்பளம் வாங்குவதாக நடிகர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 May 2019, 1:54 pm
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.1.5 கோடிக்கு குறைவாக சம்பளம் பெற்று வந்தார். இதையடுத்து அவரது படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை ஈட்டின.
Samayam Tamil Nayanthara


நயன்தாராவை வைத்து இயக்கிய தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. இதனால் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டார். தற்போது ரூ.5 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் மலையாள முன்னணி நடிகர்கள் இவ்வளவு சம்பளம் வாங்குவது இல்லை என பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இவர் தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மார்க்கெட்டை வைத்து தான் நடிகர், நடிகைகளின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. நயன்தாரா அளவிற்கு எத்தனை நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள்?

சினிமாவில் பெண்கள் மீதான சுரண்டல் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. பொதுவாக நடிகர்களை விட நடிகைகளுக்கு சம்பளம் குறைவு என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்