ஆப்நகரம்

Aishwarya Lekshmi:பெரிய இயக்குநருடன் இணையும் தனுஷ்க்கு ஜோடி யார் தெரியுமா?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஒருவர் அறிமுகமாகிறார்.

Samayam Tamil 18 Jul 2019, 3:26 pm
நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். மிகத் தீவிரமாக படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் இம்மாதம் படப்பிடிப்பு நிறைவு பெறும் எனத் தெரிகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது. இதனையடுத்து இயக்குநர் துரை செந்தில்குமார் படத்தில் இணைகிறார். மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். ஆனால் இப்போது ஒரு உற்சாக செய்தியாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்திருக்கிறது.
Samayam Tamil aish la

அமலா பால் நெருங்கி முத்தம் கொடுத்தது யாருக்கு...கசிந்தது புகைப்படம்!!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும், தனுஷும் கடந்த வருடமே இணைந்து படம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினியின் “பேட்ட” பட வாய்ப்பு கிடைத்ததால் இப்படம் நடைபெறாமல் போனது. இப்போது இப்படம் மீண்டும் தொடங்கியிருக்கிறது.
லிப்லாக் ஒண்ணும் விளையாட்டல்ல: கோபமான விஜய் தேவரகொண்டா!

ஆக்‌ஷன் திரில்லரா?

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தேர்வாகியுள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக விளங்கும் இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகிறார். ஆனால் அவர் ஏற்கனவே விஷால்-சுந்தர்.சி படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முழுக்க வெளிநாட்டில் நடக்கும் கதையை கொண்டது என்பதால் வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்த தற்போது முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
Jersey Tamil Remake: கிரிக்கெட் வீரனாக வாய்ப்புக்காக போராட தயாரான விஷ்ணு விஷால்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்