ஆப்நகரம்

மலையாள பிக்பாஸ் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் விவரம்!

மலையாள பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நாள் ஒன்றுக்கு வாங்கும் சம்பளம் பட்டியல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Jul 2018, 5:17 pm
மலையாள பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நாள் ஒன்றுக்கு வாங்கும் சம்பளம் பட்டியல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil mallu biggboss


பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, மராத்தி என பல மொழிகளிலும் நடத்தப்பட்டு அது டிவிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

மலையாளத்தில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த போட்டியில் பல்வேறு துறை சம்பந்தப்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் யார், யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஸ்வேதா மேனன் ஒரு நாளைக்கு 1 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். அதையடுத்து ரஞ்சனி ஹரிதாஸ் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.

மற்ற போட்டியாளர்களான, நாள் ஒன்றுக்கு அனூப் சந்திரன் ரூ.71 ஆயிரம், பியல் மானி ரூ.71 ஆயிரம், அர்ச்சனா சுசீலன் ரூ. 30 ஆயிரம், ஹிமா ஷங்கர் ரூ.20 ஆயிரம். பாக்கி உள்ள போட்டியாளர்கள் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்