ஆப்நகரம்

‘பெருச்சாழி’ மலையாளப் படம், தமிழில் ரீமேக்காகிறது!

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘பெருச்சாழி’ படம் தற்போது தமிழில் ரீமேக்காகவுள்ளது.

TNN 7 Aug 2017, 5:37 pm
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘பெருச்சாழி’ படம் தற்போது தமிழில் ரீமேக்காகவுள்ளது.
Samayam Tamil malayalam movie peruchazhi remake in tamil
‘பெருச்சாழி’ மலையாளப் படம், தமிழில் ரீமேக்காகிறது!


2014ம் ஆண்டு இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான படம் ‘பெருச்சாழி’. இயக்குனர் அருண் வைத்தியநாதன் ஏற்கெனவே தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘கல்யாண சமையல் சாதம்‘ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பெருச்சாழி’ படம் அரசியல் காமெடிப் படமாக இது எடுக்கப்பட்டிருந்தது.

அருண் வைத்யநாதன் இயக்கிய ‘நிபுணன்’, சமீபத்தில் ரிலீஸானது. அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, வைபவ், கிருஷ்ணா நடித்துள்ள இந்தப் படம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, அடுத்ததாக ‘பெருச்சாழி’யை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கிறார் அருண் வைத்யநாதன். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலைக்கு இந்தப் படம் பொருத்தமாக அமையும் என அவர் நம்புகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்