ஆப்நகரம்

காலா -வின் ரிலீஸால் பின்வாங்கிய மலையாள மெகா ஸ்டார்களின் படங்கள்!

‘காலா’ படம் ரிலீஸ் ஆவதால் மலையாள மெகா ஸ்டார்கள் நடித்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jun 2018, 6:41 pm
‘காலா’ படம் ரிலீஸ் ஆவதால் மலையாள மெகா ஸ்டார்கள் நடித்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kaala-malayalam


மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘நீராளி’ படத்தின் ரிலீஸ் தேதி 2ம் தேதியில் இருந்து மீண்டும் 7ம் தேதிக்கு தள்ளிப் போய் உள்ளது. வரும் ஜூன்-7ஆம் தேதி ரஜினியின் ‘காலா’ ரிலீஸாவதை அடுத்து மலையாள திரையுலக ஜாம்பவான் நடிகர்கள் கூட ஜூன்-14லிருந்து தான் தங்களது படங்களை ரம்ஜான் ரிலீஸாக வெளியிட இருக்கிறார்கள்.

இதில் மோகன்லாலின் ‘நீராளி’, மம்முட்டியின் ‘ஆப்ரஹாமிண்டே சந்ததிகள்’, பிருத்விராஜின் ‘மை ஸ்டோரி’ , ஜெயசூர்யாவின் ‘ஞான் மேரிக்குட்டி’ ஆகிய படங்கள் தங்கள் ரிலீஸை உறுதி செய்திருந்தன. இந்தநிலையில் மோகன்லாலின் ‘நீராளி’ படம் ஜூலை -12க்கு தள்ளிப்போகிறது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்