ஆப்நகரம்

விக்ரமை எதிர்க்கும் மலையாள வில்லன்!

‘துருவ நட்சத்திரம்’ படத்தில், நடிகர் விக்ரமுக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்து வருகிறார்.

Samayam Tamil 18 Apr 2018, 11:59 am
‘துருவ நட்சத்திரம்’ படத்தில், நடிகர் விக்ரமுக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்து வருகிறார்.
Samayam Tamil duruvanatchathiram


நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் நடிகைகள் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில், பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பல்கேரியா, துருக்கி, அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகள், இஸ்தான்புல், ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தில் விக்ரமுடன் மோதும் வில்லன் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருந்தார் கௌதம் மேனன். ‘களி’, ‘கம்மட்டி பாடம்’ உள்ளிட்ட பல்வேறு மலையாளப் படங்களில் நடித்த விநாயகன் தான் அந்த வில்லன். இவர் ஏற்கெனவே விஷாலின் ‘திமிரு’ மற்றும் தனுஷின் ‘மரியான்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்