ஆப்நகரம்

Chekka Chivantha Vaanam: ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளும் ‘செக்க சிவந்த வானம்’!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Samayam Tamil 27 Sep 2018, 1:38 pm
மணிரத்னம் இயக்கியுள்ள மல்டி-ஸ்டாரர் படமான ‘செக்க சிவந்த வானம்’ படத்தை, ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Samayam Tamil ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளும் ‘செக்க சிவந்த வானம்’!!
ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளும் ‘செக்க சிவந்த வானம்’!!


இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் தமிழ் இயக்குநரான மணிரத்னம், தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ‘செக்க சிவந்த வானம்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் பிரகாஷ் ராஜ், தியாகராஜன் நடிகைகள் அதிதி ராவ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெயசுதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மல்டி-ஸ்டாரர்:
தமிழில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியாகும் மல்டி ஸ்டாரர் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இப்படத்தின் டிரைலரும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இசை:
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதுவரையில் மழைக்குருவி, பூமி பூமி, கள்ளக் களவாணி, ஹையாட்டி என்ற நான்கு பாடல்கள் இப்படத்தில் வெளியாகி உள்ளன. அதில், மழைக் குருவி பாடல் சமீபத்தில் வெளியான பாடல்களிலேயே, அனைவருக்கும் பிடித்தமான பாடலாக அமைந்துள்ளது. மேலும், டிரைலரிலேயே பின்னணி இசை மிகவும் பிரம்மாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி-சிம்பு:
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோக்களாக இருக்கும் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்துள்ள படம் இது. இதில், யாருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என இரு நடிகர்களின் ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.

மணிரத்னம்:
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய முந்தைய படங்களான கடல், ஓ காதல் கண்மணி மற்றும் காற்று வெளியிடை படங்களில் ஓ காதல் கண்மணி படம் மட்டுமே குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றன. மற்றப் படங்கள் பெரும் தோல்வியையே சந்தித்தன. இதனால், இந்தப் படத்தை வெற்றி படமாக்க வேண்டிய கட்டயாத்தில் இயக்குநர் மணிரத்னம் உள்ளார். இந்தப் படம் அவரது பாணியிலான படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், அனைத்து மட்ட ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என நம்புவோம்.

தற்போது வரை படத்தை பார்த்துள்ள ரசிகர்கள் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார்கள். அவர்கள் படத்தைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.



































Also Read: Chekka Chivantha Vaanam Movie Review

அடுத்த செய்தி

டிரெண்டிங்