ஆப்நகரம்

'பொன்னியின் செல்வன்' பட பெயரில் இணையத்தில் நிகழ்ந்த மெகா மோசடி: ரசிகர்கள் புலம்பல்.!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பயன்படுத்தி இணையத்தில் மெகா மோசடி ஒன்று நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 30 Sep 2022, 5:29 pm
தென்னிந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருந்த 'பொன்னியின் செல்வன்' படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் படமாக உருவானது.
Samayam Tamil பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்


விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

Naane Varuvean: என்ன ப்ளூ சட்டை இப்படி சொல்லிட்டாரு: அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்.!

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பயன்படுத்தி ஆன்லைனில் மெகா மோசடி ஒன்று நடந்துள்ளது. படத்தை டெலிகிராமில் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாக, பலரும் ஆர்வத்துடன் படத்தை பார்க்க டெலிகிராம் லிங்கை க்ளிக் செய்துள்ளனர். ரூ 45 தொகையை கட்டணமாகச் செலுத்தினால் படத்தை டவுன்லோடு செய்து பார்த்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


இதனையடுத்து, பலரும் ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் பணத்தை செலுத்திய பல மணி நேரமாகியும் படம் வராமல் லோடிங் லோடிங் என்று வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகுதான் இது ஏமாற்று வேலை என்பது தெரிய வந்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்