ஆப்நகரம்

மதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை

பிரபல நடிகை மனீஷா கொய்ராலா தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை பதிவு செய்துள்ளது

Samayam Tamil 5 Jan 2019, 1:28 am
மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும், ஆனால் புற்றுநோய் பாதிப்பில் மீண்டும் வாழ்வை புரிந்து கொண்டதாக பிரபல நடிகை மனீஷா கொய்ராலா தனது சுயசரிதையில் தெரிவித்துள்ள சம்பவங்கள் பாலிவுட் உலகில் புயலை கிளப்பி வருகிறது.
Samayam Tamil குடிப்பழக்கத்தால் எனக்கு புற்றுநோய் வந்தது- மனம் திறக்கும் மனீஷா


90-களின் மத்தியில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மனீஷா கொய்ராலா. இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்து, இங்கேயும் முன்னணி நடிகையாக இருந்தார்.


தொடர்ந்து இந்தியன், முதல்வர், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்தார்.

இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. திரைத்துறையிலிருந்து விலகிய இவர், நோய் பாதிப்புக்காக சிகிச்சைகள் மேற்கொண்டு தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர், ஹீல்டு: புது வாழ்வு கொடுத்த கேன்சர்’ என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இதை பென்குயின் பதிப்பகம் அச்சிட்டு விற்பனைக்காக வெளியிட்டுள்ளது.


அதில், ’தீராத குடிப்பழக்கத்தினால் தான் எனக்கு கேன்சர் ஏற்பட்டது. நண்பர்கள், முன்னாள் காதலர் என பலரும் எச்சரித்தும் என்னால், குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. கேன்சரால் பாதிக்கப்பட்ட நாட்கள் அவ்வளவு கொடுமையானது என்றாலும், கேன்சர் என் வாழ்க்கையின் பரிசாகவே கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது. முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். கேன்சர் பாதிப்பில் இருந்தபோது தான் எதிர்க்கொண்ட சவால்கள் குறித்தும் அந்த புத்தகத்தில் மனிஷா கொய்ராலா பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்