ஆப்நகரம்

வெள்ளித்திரையை விட சின்னத்திரை பெஸ்ட் - மனிஷா ஸ்ரீ!!

‘வீர சிவாஜி’ படத்தில் நடித்த மனிஷா ஸ்ரீ தற்போது வெப் சீரியல் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

Samayam Tamil 7 Jul 2018, 5:21 pm
‘வீர சிவாஜி’ படத்தில் நடித்த மனிஷா ஸ்ரீ தற்போது வெப் சீரியல் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
Samayam Tamil manisha


நடிகை மனிஷா ஸ்ரீ, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ மற்றும் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ படத்திலும் நடித்துள்ளார். இந்த இரு படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். தற்போது மனிஷா ஸ்ரீ தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் ‘வெர்ஜின் பசங்க’ என்ற வெப் சீரியஸில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் ஒரு பகுதியின் காணொளி சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் இவர் பேசும் வார்த்தைகள் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியஸை கோபி இயக்கியுள்ளார்.

அடுத்ததாக நடிகை மனிஷா ஸ்ரீ, கோலிவுட்டை அடுத்து பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்