ஆப்நகரம்

பிருந்தா மாஸ்டருக்கு நன்றி கூறிய மஞ்சிமா மோகன்!

படத்தில் நடனமாடுவதற்கு தனக்கு உதவி செய்த பிருந்தா மாஸ்டருக்கு நடிகை மஞ்சிமா மோகன் நன்றி தெரிவித்துள்ளார்.

TNN 21 Apr 2017, 4:45 pm
படத்தில் நடனமாடுவதற்கு தனக்கு உதவி செய்த பிருந்தா மாஸ்டருக்கு நடிகை மஞ்சிமா மோகன் நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil manjima mohan tanks to dance master brindha
பிருந்தா மாஸ்டருக்கு நன்றி கூறிய மஞ்சிமா மோகன்!


நடிகை மஞ்சிமா மோகன் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்திற்காக இவருக்கு அறிமுக நாயகி என்ற விருது கிடைத்தது. தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் ம் நடித்து வருகிறார்.

இப்படம் குறித்து அவர் பேசும்போது, ‘‘நாங்கள் நான்கு நாட்களாக ஓமனில் ஒரு பாடல் படப்பிடிப்பில் இருக்கிறோம். மொத்த படக்குழுவும் கடும் வெயிலில் பாடலை முடிக்க கடுமையாக உழைத்து வருகிறோம். படத்தில் நடனம் ஆடுவது இதுதே முதன்முறை. அப்பாடலை மிகவும் எளிதாக முடிக்க உதவிய பிருந்தா மாஸ்டர் மற்றும் அவரது குழுவிற்கு நன்றி என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்