ஆப்நகரம்

திருமண உறவு எனக்காக காத்திருக்கும் என்கிறார் காஜல்!

நடிகை காஜல் அகர்வால் திருமண உறவு எனக்காக கொஞ்ச நாள் காத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

TNN 25 Mar 2016, 5:35 pm
நடிகை காஜல் அகர்வால் திருமண உறவு எனக்காக கொஞ்ச நாள் காத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil marriage relation will be wait for me says kajal agarwal
திருமண உறவு எனக்காக காத்திருக்கும் என்கிறார் காஜல்!


நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் குறையும்போதெல்லாம் அவர் வீட்டில் திருமண பேச்சு அடிபடுகிறது. கைவசம் படங்கள் வந்தவுடன் திருமண பேச்சு அடங்கிப்போகிறது. மும்பை தொழில் அதிபர் ஒருவரை காஜல் அகர்வால் காதலிக்கிறார் என்றும், அவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும, அதற்காக கோயிலில் பரிகார பூஜை செய்ததாகவும் சில வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. இதுபற்றி காஜல் அகர்வால் நேரடியாக கூறாவிட்டாலும் அவரது தங்கை நிஷா அகர்வாலிடம் கேட்டபோது, சாக்குபோக்கு சொல்லி சமாளித்தார்.

தற்போது மீண்டும் காஜல் திருமணம் செய்ய உள்ளதாக இணைய தளங்களில் தகவல் வெளியானது. அதுபற்றி கூறிய காஜல் அகர்வால் ‘‘நிறைய படங்களில் தற்போது நான் நடிப்பதால் எனது திருமணம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. திருமண உறவு எனக்காக இன்னும் கொஞ்சநாள் காத்திருக்கும்’’ என்றார்.

தற்போது தமிழ், தெலுங்கில் ஐந்து படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். விஷால் நடிக்கும் ‘டெம்பர்’ தமிழ் ரீமேக்கிலும் காஜல் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்