ஆப்நகரம்

‘மருது’ வெளியாவது உறுதி: விஷால்

‘மருது’ படம் குறிப்பிட்ட நாளில் வெளியாவது உறுதி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

TOI Contributor 28 Apr 2016, 6:45 pm
‘மருது’ படம் குறிப்பிட்ட நாளில் வெளியாவது உறுதி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
Samayam Tamil maruthu should be released for sure says vishal
‘மருது’ வெளியாவது உறுதி: விஷால்


இன்றைய இளம் ஹீரோக்களில் வித்தியாசமானவர் விஷால் தான். தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல தொழில் வாழ்க்கையிலும் மற்ற ஹீரோக்களிடமிருந்து வேறுபட்டிருக்கிறார்.

நடிகர் விஷால் தன்னுடைய படங்களை வெளியிடும் தேதியை தீர்மானித்துவிட்டால் அந்த தேதியில் எத்தனை பெரிய ஹீரோ நடித்த படம் வெளியானாலும் கவலைப்படமாட்டார். மற்ற ஹீரோக்களோ தன்னுடைய படம் வெளியாகும்போது மற்ற ஹீரோக்கள் படம் வெளிவருவதை விரும்பமாட்டார்கள்.இந்த விஷயத்தில் விஷால் டென்ஷனாகவே மாட்டார்.

‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ள ‘மருது’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால். விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டநிலையில், பாடல்கள் மற்றும் டிரைலரை நாளை 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு பிறகு ‘மருது’ படத்தை மே மாதம் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அதே தேதியில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு ’படம் வெளிவர உள்ளதாக விஷாலுக்கு சொல்லப்பட்டது. அவரோ அதைப் பற்றி கவலையேப்படாமல் ‘மருது’ படத்தை மே மாதம் 20 ஆம் தேதிதான் ரிலீஸ் செய்ய வேண்டும் உறுதியாக சொல்லி விட்டாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்