ஆப்நகரம்

கணவரை இழந்த 'மாஸ்டர்' பட நடிகைக்கு விரைவில் மறுமணமா?

கணவரை இழந்த நடிகை சுரேகா வாணி விரைவில் மறுமணம் செய்து கொள்ளப்போவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இது குறித்த உண்மையை அவரே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Feb 2021, 12:21 pm

ஹைலைட்ஸ்:

  • இரண்டாவது திருமணம் குறித்து சுரேகா வாணி விளக்கம்
  • என்னை பற்றிய செய்தி எல்லாம் பொய்- சுரேகா வாணி
  • இரண்டாவது திருமணம் செய்யும் ஐடியா இல்லை- சுரேகா வாணி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil surekha vani

தமிழ், தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சுரேகா வாணி. அவர் டிவி இயக்குநர் சுரேஷ் தேஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சுப்ரிதா என்கிற மகள் இருக்கிறார்.
பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சுரேஷ் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் மரணம் அடைந்தார். ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடம்புக்கு என்ன பிரச்சனை என்று சுரேகா வாணி தெரிவிக்கவில்லை.

கணவர் இறந்த பிறகு கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார் சுரேகா வாணி. சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவர் போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, என்ன சுரேகா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறீர்கள் போன்று என்று கமெண்ட் அடித்தனர்.

இந்நிலையில் சுரேகா வாணி மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை பார்த்தவர்களோ சுரேகாவை பற்றி ஒரு மாதிரியாக பேசத் துவங்கிவிட்டனர்.

மறுமணம் குறித்து சுரேகா கூறியிருப்பதாவது,

நான் என் மகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன். மறுமணம் செய்து கொள்ளும் ஐடியாவே இல்லை. என்னை பற்றி வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றார்.

பிரபல பாடகி சுனிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறுமணம் செய்து கொண்டார். அதன் பிறகே சுரேகாவும் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சு கிளம்பியது. சுனிதா போன்று தன் அம்மாவும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சுரேகாவின் மகள் தான் ஆசைப்படுகிறாராம். ஆனால் சுரேகாவுக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் சுரேகா. ஆனால் அவர் நடித்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கிவிட்டனர். இதனால் கவலையில் இருந்தார் சுரேகா. இந்நிலையில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அது வைரலானதை பார்த்த சுரேகா சந்தோஷப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்