ஆப்நகரம்

கொரோனா பரவல்; மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா வெளியிட்ட புகைப்படம்!

கொரோனா அச்சம் குறித்து ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.

Samayam Tamil 25 Mar 2020, 7:13 am
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே பேட்ட படத்தில் நடித்திருந்தவர். கொரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் சினிமா நட்சத்திரங்கள் உட்பட அனைத்து கலைஞர்களுமே வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவர்களது ரசிகர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், மாளவிகா ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil malavika mohanan


மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ


பெற்றோர், சகோதர், நான் நேசிக்கும் எனக்கு நெருங்கி அனைவரது உடல் நலனும் பாதுகாப்புமே என் வாழ்க்கையில் நான் முன்னுரிமை கொடுக்கும் முக்கியமான விசயங்களாகும். பொறுப்பற்ற தன்மையும், அலட்சிய மனப்பாங்கும் இருந்தால் நாம் நேசிக்கும் நபர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தலுக்கு ஆளுக்குவதற்கு சமம் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் பரவி வருவதால், மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அடுத்த 21 நாட்களுக்கு இதை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நம்முடைய வாசகர்களும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து, கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும் சமயம் தமிழ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மக்களின் நலன்தான் நமக்கு அத்யாவசியம். விதிமுறைகளை மீறாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்