ஆப்நகரம்

விஜய் பிறந்தநாளில் மாஸ்டர் ரிலீஸ்! உண்மை என்ன?

விஜய் பிறந்தநாளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Apr 2020, 1:08 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவேண்டியது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் அந்த படம் என்று வெளியாகும் என தகவல்கள் வெளியில் கசிந்துள்ளன.
Samayam Tamil vijay


விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு, மகேந்திரன், ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கிட்டத்தட்ட அனைவருமே பேசினர். ஆனால் எதிர்பார்த்தபடி விஜய் அரசியல் பேசவில்லை. இதனால் ரசிகர்களில் சிலர் வருத்தத்துக்குள்ளாகினர். எனினும் பெரிய அளவில் இந்த விழாவில் தாக்கம் தெரியவில்லை. காரணம் இந்த விழாவுக்கு ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. இதனை குறிப்பிட்ட விஜய் வருத்தமும்பட்டார்.

ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்படாமல் இருந்ததால் வருத்தமாக இருந்தாலும், படம் வெளியாகும்போது கொண்டாடலாம் என ஏப்ரல் 9ம் தேதியை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை 2 மாதங்களுக்கு தள்ளிப்போனதால் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனினும் ரசிகர்களுக்கு ஒரு இரட்டை விருந்தாக விஜய்யின் பிறந்தநாளில் மாஸ்டர் படம் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை எனினும் இது விஜய்க்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து கசிந்த தகவல் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்