ஆப்நகரம்

Darbar vs Sarkar: தர்பார் முதல் நாள் வசூல்: தியேட்டர் ஸ்க்ரீன் தான் கிழிஞ்சுச்சு; வச்சி செய்யும் விஜய் ரசிகர்கள்!

Darbar திரைப்படத்தின் First Day Collection-ஐ கேலி செய்யும் வண்ணமும், ரஜினியின் தர்பார் திரைப்படத்தை தாக்கி பேசியும் #MasterOfOpeningVijay எனும் ஹேஷ்டேக் ட்வீட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Samayam Tamil 9 Jan 2020, 5:28 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உலகம் முழுவதும் மொத்தம் 7000 திரையரங்குகளில், இந்தியாவில் மட்டும் மொத்தம் 4000 திரையரங்குகளில் இன்று வெளியான தர்பார் திரைப்படம் எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்கு பல வகையான விமர்சனங்கள் வெளியான வண்ணம் இருக்கும் நிலைப்பாட்டில், திடீரென்று ட்வீட்டர் தளத்தில் #MasterOfOpeningVijay என்கிற ஹேஷ்டேக் டிரண்ட் ஆகி வருகிறது.
Samayam Tamil Darbar Fist day Collection


Darbar USA Premiere Collection: "தர்பார் வசூல், பிகிலை விட ரொம்ப கம்மி" - கழுவி ஊத்தும் நெட்டிசன்!

தர்பார் திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் ஆனது "அவ்வளவு" சிறப்பாக இல்லை என்றும், தமிழ்நாட்டை பொறுத்தவரை விஜய் தான் ஓப்பனிங் டே வசூல் ராஜா என்கிற கோணத்தின் கீழ் மாட்ஸர் ஆப் ஓப்பனிங் விஜய் என்கிற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை சுமந்து பதிவிடப்பட்ட சில ட்வீட்கள் ஆனது ரஜினியின் தர்பாரை கேலிக்குள்ளாக்கி வருகின்றன.

சிலர் விஜய் ஒரு பாக்ஸ் ஆபிஸ் மான்ஸ்டர் என்று குறிப்பிட்டு உள்ளனர், சிலர் "இயக்குனர் ஷங்கரை வைத்தே ஒன்னும் முடியல" என்றும், "என் தியேட்டர்ல உன் படத்தை ஓட்டினா.. ஸ்க்ரீன் கிழிஞ்சிடும்!" என்றும் ரஜினியின் தர்பார் வசூலை கேலி செய்து வருகின்றனர்.

சும்மா கிழி, கிழின்னு கிழிச்ச ரஜினி: தர்பார் விமர்சனம் சினிமா விமர்சனம்

சிலர் இதே ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ரஜினிக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்து வருகின்றன. அதாவது "அன்புள்ள விஜய் ரசிகர்களே! நீங்கள் என்ன வேண்டடுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் ரஜினிகாந்த மில்லியன் கணக்கான இதயங்களில் இருக்கிறார், அதுதான் உண்மை. உங்களுடைய பாக்ஸ் ஆபிஸ் பஞ்சாயத்துகளை ஓரமாக வைத்துவிட்டு, "புகைச்சல்" இல்லாத பொங்கலை கொண்டாடுங்கள்!" என்றும் கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்