ஆப்நகரம்

இந்த நாள் இப்படியா ஆகணும்?: புலம்பித் தள்ளும் 'மாஸ்டர்' விஜய் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று மாஸ்டர் படம் ரிலீஸாகியிருக்க வேண்டியதை நினைத்து விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Samayam Tamil 9 Apr 2020, 12:06 pm
கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று மாஸ்டர் படம் ரிலீஸாகியிருக்க வேண்டியதை நினைத்து விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
Samayam Tamil master vijay fans are so sad
இந்த நாள் இப்படியா ஆகணும்?: புலம்பித் தள்ளும் 'மாஸ்டர்' விஜய் ரசிகர்கள்



மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தை ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருப்பதால் படத்தை ஜூன் மாதம் வெளியிடலாமா என்று படக்குழு யோசனையில் உள்ளதாம். இந்நிலையில் ஏப்ரல் 9ம் தேதி வந்தும் ஒன்றும் நடக்காததால் விஜய் ரசிகர்கள் சோக கீதம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கவலை

ஏப்ரல் 9ம் வந்தாச்சு, ஆனால் மாஸ்டர் மட்டும் வரவில்லையே. இந்த வீணாப் போன கொரோனா வைரஸ் மட்டும் பரவாமல் இருந்திருந்தால் இன்று எங்களுக்கு மாஸ்டர் திருவிழாவாச்சே. தியேட்டர்களில் அமர்க்களப்படுத்தியிருப்போமே. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை?. இன்று தியேட்டரில் விஜய்ணாவை பார்த்து விசில் அடித்து ஆரவாரம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது எல்லாம் வீணாப் போச்சே என்கிறார்கள் ரசிகர்கள்.

மீம்ஸ்

மாஸ்டர் ரிலீஸாகாத சோகத்தை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தியுள்ளனர் விஜய் ரசிகர்கள். விஜய்ணா கட்அவுட்டுக்கு மாலைப் போட்டு, தியேட்டரில் கொண்டாட வேண்டிய நேரத்தில் இந்த கொரோனா இப்படி புலம்ப வைத்துவிட்டதே என்று நொந்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

Twitter-Ak🗡️

ரத்னகுமார்

மாஸ்டர் படம் ரிலீஸாகாததை நினைத்து விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அந்த படத்தில் பணியாற்றிய இயக்குநர் ரத்னகுமாரும் ஃபீல் பண்ணி ட்வீட் செய்துள்ளார். விஜய் ரசிகர்கள் சோகமாக ட்வீட் போடுவதை பார்த்து அவருக்கும் வருத்தமாகிவிட்டது. மாசு, போராட்டம், ரெய்டு, இப்போ இது என்று கூறி மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் எடுத்த செல்ஃபியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரத்னகுமார்.

Twitter-Rathna kumar

அடுத்த செய்தி

டிரெண்டிங்