ஆப்நகரம்

சத்யராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட திருமுருகன் காந்தி!

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார்.

Samayam Tamil 19 Nov 2018, 5:50 pm
சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார்.
Samayam Tamil சத்யராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட திருமுருகன் காந்தி!


இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. இந்தப் படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குனர் தீரன் கூறுகையில், “இந்தப் படம் உண்மையான சம்பவங்களை அப்படியே தோலுறித்து காட்டியுள்ளது. சமூக விஷயங்களை உள்ளடக்கிய தரமான பொழுதுபோக்குப் படமாக உருவாகி வருகிறது.

மேலும் இது ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த படமாகும். இந்தப் படம், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். படத்தின் நாயகன் சத்யராஜ், சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார். நான் அவரது எளிமை, அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்டேன்” என்கிறார் இயக்குநர் தீரன்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்