ஆப்நகரம்

தெலுங்கில் வெளியாகும் தனுஷின் ‘மயக்கம் என்ன’!

தனுஷ் நடிப்பில் உருவான ‘மயக்கம் என்ன’ படம் தெலுங்கில் டப்பாகி வெளியாகவுள்ளது.

TNN 26 Apr 2017, 4:14 pm
தனுஷ் நடிப்பில் உருவான ‘மயக்கம் என்ன’ படம் தெலுங்கில் டப்பாகி வெளியாகவுள்ளது.
Samayam Tamil mayakkam enna movie remake in telugu
தெலுங்கில் வெளியாகும் தனுஷின் ‘மயக்கம் என்ன’!


தனுஷ் இயக்கிய ‘ப பாண்டி’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் வெளியாகவுள்ளது. மேலும் தனுஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாவது பாகத்தை முடித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து ‘வடசென்னை’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பின்னர் ‘மாரி-2’ படத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கார்த்திக் சுப்புராஜ் உடன் இணையவிருக்கும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் - ரிச்சா கங்கோபாத்யா நடிப்பில் கடந்த 2011-ல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மயக்கம் என்ன’. இப்படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதுபோல் சிம்பு - நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்