ஆப்நகரம்

சினிமா வாய்ப்பு தருவதாக பலமுறை பலாத்காரம்: பிரபல நடிகர் மீது பரபரப்பு புகார்.!

பிரபல மலையாள நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Apr 2022, 7:20 am
ஓடும் காரில் பிரபல நடிகையைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் சிக்கியுள்ள நிலையில் மீண்டும் ஒரு பிரபலம் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது திரைத்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Vijay Babu
Vijay Babu


மலையாளத்தில் ஹோம் ஆகிய படங்களைத் தயாரித்து நடித்ததற்காக பிரபலமானவர் விஜய் பாபு. இவர் ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபலமான படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானவர். இவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம் பெண் ஒருவரை எர்ணாகுளத்தில் உள்ள தனது குடியிருப்பில் விஜய் பாபு பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மீண்டும் கைதாகும் சர்ச்சை நடிகை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
இம்மாதம் 22ஆம் தேதி விஜய் பாபு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் பாபு மீது பாலியல் பலாத்காரம் மற்றும் உடல் உபாதை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விவரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்